GOLD தங்கம் GOLD தங்கம் GOLD தங்கம்



GOLD

ஒரு நாட்டின் அந்நியச் செலாவணி மதிப்பும், ரூபாய் மதிப்பும் அந்நாட்டிடம் இருக்கும் தங்கத்தின் இருப்பை வைத்தே நிர்ணயிக்கப்படுகின்றன. அந்தந்த நாட்டின் செலாவணியைக் குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள்.

ஒவ்வொரு நாடும் அதன் மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி)யில் தங்கத்தைக் கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றவாறு அந்நாட்டு அரசாங்கம் செலாவணி அல்லது நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது. தங்கத்தின் விலை சாமானியர்களை எட்டாத அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது. தங்கம் என்ற சொல் இந்தியர்களைக் கவர்ந்து இழுக்கும் மந்திரச் சொல்லாகவே இருக்கிறது. அதனால்தான் உலகளவில் தங்கம் வாங்குவோரில் இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது.
இந்திய இல்லங்களில் 64 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 20 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக உலக தங்கக் கவுன்சில் அண்மையில் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி கையிருப்பு, கோயில்களில் உள்ள தங்கங்களின் இருப்பு இதில் சேர்க்கப் படவில்லை.

தங்கத்தின் பயன்பாடு
தங்கம் துருப்பிடிக்காது. மனித உடலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. எனவே, உலகம் முழுவதும் ஆபரணம் செய்வதற்காக 60 சதவீதத் தங்கம் பயன் படுத்தப்படுகிறது. அது மட்டுமின்றி தங்கப்பல் கட்டுவதற்காக மட்டும் மொத்த உற்பத்தியில் 2 சதவீதத் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. முதன் முதலாக தங்கப்பல் கட்டியவர்கள் சீனர்கள் என்கிறது வரலாறு.

இந்தியா, இலங்கை, அரபு நாடுகளில் 22 காரட் அளவு தரம் பயன்படுத்தப்படுகின்றன. சீனா, தைவான், ஹாங்காங்கில் 24 காரட், ரஷ்யாவில் 14 காரட் அளவிற்கு தரம் அறிந்து பயன்படுத்தப்படுகின்றது.

உலகளவில் அதிக அளவு தங்கம் விற்பனையாகும் நாடான இந்தியாவில், தங்கம் பெரும்பாலும் ஆபரணத்திற்காகவே வாங்கப்படுகிறது, பயன்படுத்தப் படுகின்றன.

எங்கே கிடைக்கிறது தங்கம்?
கி.மு.325-ல் ஜிப்ரால்டர் பகுதியில் கிரேக்கர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே ரேகைபோல பாறைகளில் படர்ந்திருக்கிறது. சுரங்கங்கள் மூலம் தங்கம் தோண்டி
எடுக்கப்படுகிறது. பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை ரசாயன  முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது. அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது.

உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி தென் ஆப்ரிக்காவில் வெட்டி எடுக்கப்படுகிறது. உலகின் மிகவும் ஆழமான தங்கச் சுரங்கம் தென் ஆப்ரிக்காவில் உள்ள சுவுகாவில் உள்ளது. 3.7 கி.மீஆழத்தில் அங்கு தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. இந்தியாவில் நமது அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில்கோலார்என்னுமிடத்திலும் தங்கம் எடுக்கப்பட்டது.

தங்கத்தின் அளவீடு
காரட்என்ற அலகால் தங்கம் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22 காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும்.

18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதவீதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும்.

தங்கத்தின் தரம்
தங்கத்தின் தரத்தை அறிய தற்போது ஹால்மார்க், பி..எஸ். முத்திரைகள் உள்ளன. ஆனால், தொடக்க காலத்தில் தங்கத்தை பல்லால் கடித்துப் பார்த்து நம்பகத்தன்மையை சோதிக்கும் முறை இருந்தது. தங்கம் லேசான உலோகம் என்பதால் பல் அடையாளம் பதிந்து விடும். இதை வைத்து தங்கத்தின் தரத்தை அறிந்துள்ளனர்.

விலை நிர்ணயம் செய்வது யார்?
உலகச் சந்தையின் முன்னணி வர்த்தகர்கள் ஐந்து பேருடன் 1919-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி ஒப்பந்தம் செய்து, லண்டன் கோல்டு மார்க்கெட் பிக்சிங் லிமிடெட் (தற்போதுலண்டன் புல்லியன் மார்க்கெட்’) என்ற நிறுவனம்தான் தங்கத்தின் தினசரி விலை ஏற்ற இறக்கத்தை நிர்ணயிக்கத் தொடங்கியது. காலை 10.30, மதியம் 3.00 மணி என ஒரு நாளில் இரண்டு முறை டாலர், பவுண்டு மதிப்பில் தங்கத்தின் விலை நிர்ணயம் தொடங்கியது. அது இப்போது யூரோவுடன் சேர்ந்து தொடர்கிறது.

தங்கத்தின் விலை நிர்ணயம் 1919-ல் தொடங்கி விட்டாலும் இது அள்ளிக் கொடுக்கும் அட்சய பாத்திரம் என்று அப்போது யாருக்கும் தெரியாது. 1980 ஜனவரி 21-க்குப் பிறகுதான் தங்கத்தின் மதிப்பு உலக அளவில் அதிகமானது. ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் 500 டாலரைத் தாண்டாத தங்கத்தின் விலை முதல் முறையாக 850 டாலரானது அன்றுதான்.

தற்போதுலண்டன் கோல்டு பூல்என்ற அமைப்பைச் சேர்ந்த தலைவரும், 5 உறுப்பினர்களும் கூடி, தங்கத்திற்கு நிர்ணயம் செய்யும் விலையே சர்வதேச விலையாகும். சர்வதேச விலை நிலவரத்தை கருத்தில்கொண்டு மும்பை மார்க்கெட்டில் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கிறார்கள். அப்படி நிர்ணயிக்கப்படும் விலை தான் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் பின்பற்றப்படுகிறது.

இந்தியாவை விஞ்சும் சீனா
உலகிலேயே தங்கம் அதிகம் வாங்குவோரில் முதலிடம் வகிக்கும் இந்தியா, இன்னும் சில ஆண்டுகளில் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. தற்போது, சீனா உள்பட முக்கிய நாடுகள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன. 1959-ஆம் ஆண்டில், சீனர்கள் தங்கத்தை வாங்கி வைத்துக்கொண்டால், அது குற்றம். 2002-ஆம் ஆண்டு வரை அதற்கு சிறைத் தண்டனை என்ற அளவிற்கு சட்டம் இருந்தது. ஆனால் 2002-ல், ஷாங்காய் தங்க பரிமாற்றக் குழு அமைக்கப்பட்ட பின், தங்கம் வாங்குவது, விற்பது அனுமதிக்கப்பட்டது. இந்தச் சில ஆண்டுகளில், சீனர்கள் தங்கத்தை வாங்க ஆரம்பித்ததும், தங்கத்திற்கான தேவை அதிகரித்து, தங்க விலையும் அதிகமாக ஆரம்பித்தது. அங்கே கணினி மூலம் உடனுக்குடன் வங்கிக் கணக்கின் வாயிலாக, தங்கத்தை வாங்க ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளனதானியங்கி தங்க விற்பனை இயந்திரம் பெஜிங்கில் நிறுவப்பட்டு, மிகவும் வெற்றிகரமாக, தங்க விற்பனை முறை புகுத்தப்பட்டுள்ளது.

உற்பத்தியில் முதலிடம் யார்?
1905-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை, தென் ஆப்ரிக்காதான் தங்க உற்பத்தியில் 101 ஆண்டுகள் முதலிடம் வகித்தது. ஆனால், 2007-ஆம் ஆண்டு, அந்த இடத்தை சீனா பிடித்ததுபத்து ஆண்டுகளில் 70 சதவீத வளர்ச்சியடைந்தற்கு சீன தங்கக் கழகமும், சீன சர்வதேச சுரங்கக் குழுவும்தான் காரணம். ரஷ்யா, கனடா நாட்டினரின் உதவியோடு, பல சுரங்கங்கள் சீனாவில் தற்போது செயல்பட்டு வருகின்றன. சீன அரசாங்கமும் தங்கச்சுரங்கத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இன்று சீனாவில் பேன் ஆசியா தங்க பரிவர்த்தனை நிறுவனம், தினமும் காலை 8 மணிக்கு, சீன நாணயமான யுவானில் விலையைக் கடந்த ஆண்டு முதல் நிர்ணயிக்க ஆரம்பித்துள்ளதுஅமெரிக்க டாலரின் மதிப்பு குறையக் குறைய, ஐரோப்பியப் பிரச்சினைகள் அதிகமாக அதிகமாக, இந்த விலை நிர்ணயம் வருங்காலத்தில் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதைக் குறிக்கோளாகக்கொண்டே சீன அரசு தங்கத் துறையில் அதிக கவனம் செலுத்தி, பல யுத்திகளைப் புகுத்தி வருகிறது.

தங்கத்தின் விலை ஏற்றம் ஏன்?
அமெரிக்காவின் தவறான பொருளாதாரக் கொள்கையால், இப்போது அந்நாடு மற்ற நாடுகளிடம் இருந்து கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால், டாலரின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்துகொண்டே வருகிறது. இதனால், அமெரிக்காவின் டாலரை கொள்முதல் செய்த நாடுகள் தங்கத்தை அதிக அளவில் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளன. குறிப்பாக அதிக அளவில் டாலரை கையிருப்பாகக் கொண்ட சீனா உள்ளிட்ட நாடுகள் இப்போது தங்கத்தை அதிக அளவில் கொள்முதல் செய்து வருகின்றன. இதன் காரணமாக தங்கத்தின் தேவை இப்போது மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. இதுதான் தங்கத்தின் தொடர் விலை உயர்வுக்கு காரணம்.

நிலைமை இப்படி இருக்க, தங்கத்தின் இறக்குமதி வரியை 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. இதுமறைமுகமாக தங்கக் கடத்தலுக்கு வழிவகுக்கும். வரி உயர்வில் தங்கத்தின் விலை உயரும். அதன் நுகர்ச்சியும் கட்டுக்குள் வரும் என்கிறது மத்திய அரசு. சர்வதேச நாடுகள் தங்கத்தைக் குறிவைத்திருக்கும் வேளையில், மத்திய அரசு தங்க இறக்குமதிக்கு வரி உயர்த்தியிருப்பது எதிர்காலத்தில் சிக்கலைக் கொண்டு வருமா  அல்லது பலனைத் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



புள்ளி விவரம்
கடந்த 2010-ல் தங்கத்தின் விலை 22 முறை உயர்ந்தது.

ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் (Troyounce) 31.103 கிராம் எடை கொண்டது.

கலிபோர்னியாவில் அதிகம் தங்கம் இருப்பதாக அறிந்து, 1849-ல் 40,000-த்திற்கும் மேற்பட்டோர் தங்கத்தை தோண்டி எடுக்க முற்பட்டனர். இவர்கள் ‘49ணூண்என அழைக்கப்பட்டனர். இதுகலிபோர்னியா தங்க வேட்டைஎனப்பட்டது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தை 5 மைக்ரான் விட்டம் கொண்ட மெல்லிய கம்பியாக நீட்டினால், அது 50 மைல் அளவிற்கு வரும்.

கனடாவில் கடந்த 2007-ல் தயாரிக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய தங்க நாணயத்தினுடைய விட்டத்தின் அளவு 53 செ.மீ., அதன் எடை 100 கிலோ.

தோண்டியெடுக்கப்படும் தங்கத்தில் 60 சதவீதம் ஆபரணங்கள் செய்யவே பயன்படுத்தப்படுகிறது.

கலிபோர்னியா தங்கவேட்டைக்குப் பிறகு, உலகில் 90 சதவீதம் தங்கம் தோண்டி எடுக்கப்பட்டதாகும்.

உலகில் 100 மில்லியன் மக்கள் தங்கச்சுரங்கங்களால் பயனடைந்து வருகிறார்கள்.

தங்கம் 1,064 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் உருகும்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மோலியகல் என்ற இடத்தில் 1869-ஆம் ஆண்டு, 2316 டிராய் அவுன்ஸ் எடை கொண்ட மிகப்பெரிய தங்கக்கட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்க கருவூலத்தில் 4,600 டன் தங்கம் சேமிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் வசம் 6,200 டன் தங்கம் கையிருப்புள்ளது.

கடல்களில் 15,000 டன் தங்கம் புதைந்துள்ளது.

நாகரிக வளர்ச்சிக்குப் பிறகு பூமியிலிருந்து இதுவரை 1,71,300 டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.


இந்தியாவிற்கு 11-வது இடம்
1. அமெரிக்கா  -  8,133.5
2.
ஜெர்மனி     -  3,391.3
3.
.எம்.எப்     -  2,814.0
4.
இத்தாலி      -  2,451.8
5.
பிரான்ஸ்     -  2,435.4
6.
சீனா              -  1,054.1
7.
ஸ்விட்சர்லாந்து     -  1,040.1
8.
ரஷ்யா         -     937.8
9.
ஜப்பான்     -     765.2
10.
நெதர்லாந்து     -     612.5
11.
இந்தியா     -     557.7

No comments :

Post a Comment