குரலைப் பாதுகாக்க டாக்டர். குமரேசன் வழங்கும் உணவு ஆலோசனை இதோ




குரலைப் பாதுகாக்க டாக்டர். குமரேசன் வழங்கும் உணவு ஆலோசனை இதோ:

1.    இருமல் இருந்தால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு உப்பு, இரண்டு டீஸ்பூன் மஞ்சள்தூளைக் கலந்து, தொண்டையில் படும்படி கொப்பளித்துத் துப்பவும்.

2.    நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் சித்தரத்தையை வாங்கி ஒரு துண்டு, வாயில் வைத்துக்கொள்ளவும்.

3.    பனங்கற்கண்டுடன் ஒரு கிராம்பையும் சேர்த்து மெல்லவும்.

4.    சூடான பாலில் சிறிதளவு மஞ்சள்தூள், மிளகுத் தூள், சிறு துண்டு வெல்லம் சேர்த்துக் கலந்து, இரவு படுப்பதற்குமுன் குடிக்கவும்.

5.    ஒரு டம்ளர் நீரில் துளசி இலைகளைப் போட்டுக் கொதிக்க வைக்கவும். அரை டம்ளராக வற்றியதும், சிறிதளவு தேன் கலந்து பருகவும்

6.    இருமலில் இருந்து விடுபட உலர்ந்த இஞ்சித்தூள், சீரகம் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிடவும்.

7.    துளசிச்சாறு சேர்த்த தண்ணீரை நாள்தோறும் அருந்தி வரவும். இதனால், தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று, இருமலிலிருந்து விடுபட முடியும்.

8.    நிறைய காய்கறிகள் சேர்த்து சூப் செய்து, மிளகுத்தூள் கலந்து குடிக்கவும்.

No comments :

Post a Comment